இம்மாத இறுதியில் தொடங்கும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு

இம்மாத இறுதியில் தொடங்கும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு
Updated on
1 min read

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், படத்திலிருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நேபாளம் மற்றும் பூட்டான் பைக் டூரை முடித்து விரைவில் திரும்ப உள்ளதாகவும், இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை 70 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் 40 நாட்கள் அஜித் நடிக்கும் போர்ஷன் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும், நிரவ் ஷா ஒளிப்பதிவளராக பணியாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in