திருமணத்துக்காக மதம் மாறினேனா? - ட்ரோல்களுக்கு நடிகை குஷ்பு பதிலடி

திருமணத்துக்காக மதம் மாறினேனா? - ட்ரோல்களுக்கு நடிகை குஷ்பு பதிலடி
Updated on
1 min read

சென்னை: தனது திருமணம் குறித்த ட்ரோல்களுக்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் குஷ்பு. அரசியல் சார்ந்த பதிவுகள் மட்டுமின்றி அவ்வப்போது தன்னை கேலி செய்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடியும் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்வதற்காக மட்டுமே நடிகை குஷ்பு இந்துவாக மதம் மாறியதாக ட்விட்டரில் சிலர் ட்ரோல் செய்து வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள குஷ்பு அதில் கூறியிருப்பதாவது:

என்னுடைய திருமணம் குறித்து கேள்வி கேட்பவர்களும் அல்லது நான் என்னுடைய கணவரை திருமணம் செய்வதற்காக மதம் மாறினேன் என்றும் கூறுபவர்களும் கொஞ்சம் அறிவையும் கல்வியையும் பயன்படுத்துங்கள். நம் நாட்டில் ‘சிறப்பு திருமணச் சட்டம்’ என்ற ஒன்று இருப்பதை அவர்கள் கேள்விப்படாதது வருத்தம். நான் மதம் மாறவும் இல்லை என்னை யாரும் மதம் மாறுமாறு கூறவும் இல்லை. என்னுடைய 23 ஆண்டுகால திருமண வாழ்க்கை, காதல், சமத்துவம், மரியாதை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் திடமாக உள்ளது. எனவே இதில் சந்தேகம் இருப்பவர்கள் போய் சம்பள உயர்வு கேளுங்கள். உங்களுக்கு அதுதான் தேவை.

இவ்வாறு அப்பதிவில் குஷ்பு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in