காஷ்மீரில் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்

காஷ்மீரில் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்
Updated on
1 min read

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். அவரது 21-வது படமான இதில் சாய் பல்லவி நாயகி. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஸ்டெஃபன் ரிக்டர் சண்டை இயக்குநராகப் பணியாற்றுகிறார். காட் ப்ளஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து படத்தைத் தயாரிக்கிறது.

“தேசப்பற்றைப் பேசும் படமான இது, அதிரடி ஆக்‌ஷனுடன் நிறைவான அனுபவத்தைத் தரும். இதன் படப்பிடிப்பு பிரம்மாண்ட விழாவுடன் தொடங்கியது. காஷ்மீரில் அடுத்த 60 நாட்களுக்குத் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in