‘விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல’ - இணையத்தில் வைரலாகும் சீரியல் நடிகை ஷாலினியின் விவாகரத்து போட்டோ ஷூட்

‘விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல’ - இணையத்தில் வைரலாகும் சீரியல் நடிகை ஷாலினியின் விவாகரத்து போட்டோ ஷூட்
Updated on
1 min read

சின்னத்திரை நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோஷூட் மூலம் அறிவித்துள்ளார். இந்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ சீரியல் முலமாக பிரபலமடைந்தவர் நடிகை ஷாலினி. இவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் தன் மகள் ரியாவுடன் கலந்துகொண்டார்.

இவர் ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கணவர் ரியாஸ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், சைகோதனமாக நடந்துகொள்வதாகவும் வீடியோ ஒன்றில் ஷாலினி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்டதை போட்டோஷூட் மூலமாக அறிவித்துள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“குரலற்றவர்களாக தங்களை உணருபவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி இது. ஒரு மோசமான திருமணத்தை விட்டுவிடுவது பரவாயில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவர். ஒருபோதும் குறைவாக உங்களை எண்ண வேண்டாம். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி, உங்களுக்காகவும், உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் தேவையான மாற்றங்களை செய்ய தயாராகுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்புமுனை. திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். எனது துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in