பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடி வாங்கிய ‘ஏஜென்ட்’ - 2வது நாளில் ரூ.1.6 கோடி மட்டுமே வசூல்

பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடி வாங்கிய ‘ஏஜென்ட்’ - 2வது நாளில் ரூ.1.6 கோடி மட்டுமே வசூல்
Updated on
1 min read

அகில் அக்கினேனி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஏஜென்ட்’ திரைப்படம் வெளியான இரண்டாவது நாளான நேற்று வெறும் ரூ.1.6 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி நடித்துள்ள படம் ‘ஏஜென்ட்’. இப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களிலும் இப்படத்துக்கு பயங்கர ஹைப் கொடுக்கப்பட்டது.

பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் முதல் நாளான கடந்த 28ம் தேதி நாடு முழுவதும் ரூ.6 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. இது தயாரிப்பு தரப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று இப்படம் வெறும் ரூ.1.6 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது முதல் நாள் வசூலை காட்டிலும் 73% குறைவாகும். இரண்டு நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ.7.5 கோடி மட்டுமே. மம்மூட்டியின் இருப்பும் கூட இப்படத்துக்கு கை கொடுக்க வில்லை. கேரளாவில் இப்படம் ரூ. 10 லட்சம் வசூல் செய்துள்ளது. இப்படம் ரூ.81 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது. இப்படியே சென்றால் பாக்ஸ் ஆபீசில் மரண அடி வாங்கிய படங்களின் பட்டியலில் ‘ஏஜென்ட்’ இடம் பெறலாம் என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in