விரைவில் உருவாகிறது ‘சிவா மனசுல சக்தி - 2’

விரைவில் உருவாகிறது ‘சிவா மனசுல சக்தி - 2’

Published on

ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

ஜீவா, சந்தானம் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சிவா மனசுல சக்தி’. ராஜேஷ். எம் இயக்கிய இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2009ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதையை இளைஞர்கள் மத்தியின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் பாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. தனிப் படமாக அல்லாமல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜீவா கடைசியாக நடித்த சில படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இப்படம் அவருக்கு ‘கம்பேக்’ படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை நடிகர் ஜீவாவே தயாரிக்க இருப்பது கூடுதல் தகவல். தற்போது இப்படத்துக்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜீவா தற்போது மணிகண்டன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி நடிக்கும் படத்தை ராஜேஷ் தற்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் முடிவடையும் என்றும், அதன் பிறகே ‘சிவா மனசுல சக்தி - 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in