

ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படம், 'அடியே’. கவுரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். ‘திட்டம் இரண்டு’ விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இதன் மோஷன் போஸ்டரை ஜெயம் ரவி நேற்று வெளியிட்டார்.
படம்பற்றி விக்னேஷ் கார்த்திக் கூறும்போது, “இது சயின்ஸ்பிக் ஷன் ரொமான்டிக் காமெடி படம். படித்துவிட்டு வேலையில்லாமல் மன அழுத்தத்தில் இருக்கும் பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கவுரி கிஷன் பிரபல பாடகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்