விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் அனுராக் காஷ்யப்!

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்
Updated on
1 min read

விஜய் சேதுபதியின் 50-வதுபடத்தை 'குரங்கு பொம்மை' இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். இதில் நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தில் வில்லனுக்கும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால், பிரபலமான ஒருவரை நடிக்க வைக்க படக்குழு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் இந்தி இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அனுராக் காஷ்யப், விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் நடித்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in