

நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தார். அவர் நடித்த ‘சாகுந்தலம்’ படம் கடந்த 14-ம் தேதி வெளியாகி தோல்வியைத் தழுவியது. இதனால், தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு, சமந்தாவை விமர்சித்திருந்தார்.
‘‘சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. ‘யசோதா’ புரமோஷனில் கண்கலங்கிப் பேசினார். அதன் மூலம் வெற்றிப்படமாக்க முயற்சித்தார். அதையே ‘சாகுந்தலம்’ படத்திற்கும் செய்தார். எல்லா நேரமும் அந்த மலிவான செயல்கள் வேலை செய்யாது’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவருக்குப் பதிலடி தரும் விதமாக சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘காது மடலில் ஏன் ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன். டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகம் சுரப்பதால் என பதில் வந்தது’’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும்’ என்ற ஹேஸ்டேக்கையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு அவர் பதிலளித்துள்ளார்.