Published : 24 Apr 2023 08:03 PM
Last Updated : 24 Apr 2023 08:03 PM

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ க்ளிம்ஸ் காட்சிகள் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

"திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுக்கிரகவாசி கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் 4500+VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக 'அயலான்' இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x