Published : 24 Apr 2023 05:25 PM
Last Updated : 24 Apr 2023 05:25 PM

‘வீரம்’ பட ரீமேக்கான சல்மான்கானின் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ இதுவரை ரூ.60 கோடி வசூல்

‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.60 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இந்தப்படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ள படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan). சல்மான் கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘கேஜிஎஃப்’ புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஏப்ரல் 23) படம் ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 3 நாட்களில் படம் ரூ.60 கோடி வரை வசூலித்துள்ளது. படத்தின் ட்ரெய்லர் ‘வீரம்’ படத்திலிருந்து நிறைய மாற்றங்களை செய்திருப்பதை உணர்த்தியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x