விஷால் - ஹரி இணையும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி
Updated on
1 min read

ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இவர்கள் இருவரும் மீண்டும் இணையப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்தப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34 வது படமான இது வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்ற உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in