

இன்று (செப்டம்பர் 30) பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வென்றிருப்பது யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டியில் இருக்கிறார்கள். இந்த நான்கு பேரில் யார் வெற்றியாளர் என்பது இன்று (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேற்றப்பட்ட பரணி, காயத்ரி ரகுராம், ஸ்ரீ, ஜூலி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவருமே இறுதிப் போட்டியின் போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள். இதற்கான விளம்பரம் விஜய் தொலைகாட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இந்த விளம்பரத்தில் ஓவியா இடம்பெற்றிருப்பதால், அவர் இன்று என்ன பேசப்போகிறார் என்று ஆர்வமாகவுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் ஓவியாவுக்கு பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பதால், ஆரவ்வை சந்திப்பாரா என்ன பேசுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.