

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ’துப்பறிவாளன்’ படத்தில் நாயகியாக நடிக்க, ராகுல் ப்ரீத் சிங் அணுகப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
"ராகுலிடம் பேசியுள்ளோம் ஆனால் அவர் நடிப்பார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இன்னும் சில வாரங்கள் கழித்தே நாயகி குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியிடப்படும்" எனக் படக்குழுவைச் சேர்ந்தவர் தெரிவித்தார். கடைசியாக, தமிழில் 'என்னமோ ஏதோ' படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார்.
துப்பறியும் த்ரில்லர் வகையில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் மூலம் மிஷ்கினும் விஷாலும் முதல் முறையாக இணைகின்றனர்.