ஹரிஷ் கல்யாண் - ‘அட்டகத்தி’ தினேஷின் ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு தொடக்கம்

ஹரிஷ் கல்யாண் - ‘அட்டகத்தி’ தினேஷின் ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘லப்பர் பந்து’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. ‘சர்தார்’, ‘ரன்பேபி ரன்’ படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கின்றனர்.

மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்ள, ஜி.மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in