கிரேஸி மோகன் மனைவி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

கிரேஸி மோகன் மனைவி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
Updated on
1 min read

நடிகர் கிரேஸி மோகனின் மனைவி நளினி இன்று மரணமடைந்தார்.

நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், எழுத்தாளர், சினிமா வசனகர்த்தா, நடிகர், நகைச்சுவைக் கலைஞர், என பன்முக ஆளுமைகொண்டவர் கிரேஸி மோகன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் கிரேஸி மோகன். இதனால், கிரேஸி மோகன் உடல்நிலை குன்றி கவலைக்கிடமாக இருந்தபோதே மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த கமல்ஹாசன், அவரின் உயிர் பிரியும் கடைசி நிமிடங்களில் அவர் உடன் இருந்தார்.

இந்நிலையில் கிரேஸி மோகனின் மனைவி நளினி இன்று மரணமடைந்தார். அவரின் மறைவை அடுத்து நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in