'சித்தா' போஸ்டர்
'சித்தா' போஸ்டர்

சித்தார்த்தின் சித்தாவில் என்ன கதை?

Published on

நடிகர் சித்தார்த், தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘சித்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பை நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்குகிறார்.

அவர் கூறும்போது, “சித்தப்பா என்பதன் சுருக்கம்தான் சித்தா. ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு, உணர்வுகள்தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் கதை நடக்கிறது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in