

நடிகர் சந்தானம் அடுத்து நாயகனாக நடிக்கும் ‘DD Returns’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
ஆர்கே என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘DD Returns’. பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மீண்டும் ஒரு காமெடி கலந்த ஹாரர் படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்பதை டீசர் உறுதி செய்துள்ளது.