சிறுவர்களுடன் ராகவா லாரன்ஸ் | படம்: ட்விட்டர்
சிறுவர்களுடன் ராகவா லாரன்ஸ் | படம்: ட்விட்டர்

‘ருத்ரன்’ படத்தில் நடிக்க அம்மா சென்டிமென்ட்தான் காரணம்: ராகவா லாரன்ஸ் தகவல்

Published on

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

படம்பற்றி ராகவா லாரன்ஸ் கூறியதாவது: இந்தப் படத்தில் இருக்கும் அம்மா சென்டிமென்ட்தான் இதில் நான் நடிக்க காரணம். அனைவருக்கும் பிடித்த கதையை கொண்ட படம் இது. குடும்ப பொழுதுபோக்கு படங்களில்தான் நடித்து வருகிறேன். அந்தப் படங்களின் அம்சங்கள் இதிலும் இருக்கும். மாஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கின்றன. குடும்பப் பாங்கான நாயகி வேண்டும் என நினைத்தோம். பிரியா பவானி சங்கர் பொருத்தமாக இருந்ததால், அவரைத் தேர்வு செய்தோம். அவருக்கு முக்கிய வேடம். சிறப்பாக நடித்திருக்கிறார். நான் செய்யும் சமூக சேவை பற்றிக் கேட்கிறார்கள். அதற்கு என் அம்மாதான் உத்வேகம். இந்த சமூக சேவைக்காக என்னைத் தேர்வு செய்த, ராகவேந்திர சுவாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in