

சக்தி, சேயோன், ராஜலட்சுமி, வைதேகி உட்பட புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாத்திசை'. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். சக்தி ஃபிலிம் பேக்டரி வரும் 21-ம் தேதி வெளியிடுகிறது.
படம் பற்றி தரணி ராசேந்திரன் கூறியதாவது: 1300 வருடங்களுக்கு முந்தைய கதை இது. பாண்டிய மன்னனுக்கு எதிராகப் போராடிய சிறு தொல்குடியை பற்றிய கதை. அந்தக் காலகட்டம், அந்த மொழி வழக்கு போன்றவற்றை அப்படியே கொண்டு வருவது சவாலாக இருந்தது. இப்படத்திற்கு முழு உயிர் கொடுத்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இதில் வேலை செய்துள்ளார்கள். இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்குப் போட்டியல்ல. ஆனால் ‘யாத்திசை’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கூறினார்.