'அயோத்தி' படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சமீபத்தில் வெளியான அயோத்தி படத்தின் கதாநாயகன் சசிகுமார், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பாராட்டியுள்ளார்.

“அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என ரஜினிகாந்த் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in