Published : 11 Apr 2023 02:01 AM
Last Updated : 11 Apr 2023 02:01 AM

தென்னாப்பிரிக்காவில் கமல்ஹாசன் - ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தீவிரம்

‘இந்தியன் 2’ படக்குழு தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டுள்ளது. அங்கு படத்தின் முக்கியமாக ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

கடந்த 1996-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லைக்கா தயாரித்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படும் நிலையில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் தைவானில் முகாமிட்ட படக்குழு, அதே வேகத்தில் பறந்து சென்று தற்போது தென்னாப்பிரிக்காவில் முகமாமிட்டுள்ளது. அங்கு பல்லாயிரம் அடி உயரத்திலான விமான சாகசக் காட்சிகள் உள்ளிட்ட ஆக்‌ஷன் படப்பிடிப்புகள் 12 நாட்கள் நடைபெற இருக்கின்றன. இது தொடர்பாக விமானத்தின் காக்பிட் அறையில் கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் மற்றும் அவர் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இதனிடையே ஜோகன்னஸ்பர்க் நகரில் தான் தங்கியிருக்கும் அறையில் உள்ள பீங்கானில் ஆன இசைக்கருவி ஒன்றை கமல் மீட்டும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x