இயக்குநர் ஆகிறார் தயாரிப்பாளர் சசிகாந்த்!

சசிகாந்த் | படம்: பேஸ்புக்
சசிகாந்த் | படம்: பேஸ்புக்
Updated on
1 min read

தனது ஒய்-நாட் ஸ்டூடியோஸ் சார்பில், ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காவியத் தலைவன்’, ‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உட்பட சில படங்களைத் தயாரித்தவர் சசிகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்கும் படத்தில் மாதவனும், சித்தார்த்தும் நடிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே ‘ஆயுத எழுத்து’ படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். நயன்தாரா நாயகியாக நடிக்க இருக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ‘டெஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in