விக்ரம் பிறந்தநாளில் வெளியாகும் ‘தங்கலான்’ வீடியோ

விக்ரம் பிறந்தநாளில் வெளியாகும் ‘தங்கலான்’ வீடியோ
Updated on
1 min read

நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ படத்தின் வீடியோ ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான்’. ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு பிறகு இந்தப்படத்தை இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ‘கேஜிஎஃப்’ பகுதிக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. படத்தின் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 17-ம் தேதி படத்தின் வீடியோ காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in