“வெற்றிமாறனின் ரசிகன் நான். ‘விடுதலை’ மிகவும் பிடித்திருந்தது” - தினேஷ் கார்த்திக்

“வெற்றிமாறனின் ரசிகன் நான். ‘விடுதலை’ மிகவும் பிடித்திருந்தது” - தினேஷ் கார்த்திக்
Updated on
1 min read

“இயக்குநர் வெற்றிமாறனின் மிகப் பெரிய ரசிகன் நான்; ‘விடுதலை பாகம் 1’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா - இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என பாராட்டியிருந்தார்.

அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ‘விடுதலை பாகம் 1’ படத்தை பார்த்த பின் பேட்டியளித்தார். அதில், “படம் சூப்பராக இருந்தது. நான் வெற்றிமாறனின் மிகப் பெரிய ரசிகன். ‘பொல்லாதவன்’ படத்திலிருந்து எனக்கு வெற்றிமாறனை பிடிக்கும். கலக்கலாக படத்தை எடுத்துள்ளார். சூரி நடிப்பு சிறப்பாக இருந்தது. படத்தில் நடித்த எல்லோரும் தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது ஒரு கற்பனைக்கு எட்டாத உழைப்பு. படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றிமாறன் உண்மையில் ஜீனியஸ். மனித உணர்வுகளை அழுத்தமான கதைக்களத்தின் மூலம் யதார்த்தமாக சித்தரித்துள்ளார். முதல் ரயில் விபத்துக் காட்சி அவரின் மேதமையை விளக்குகிறது. சூரி மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பு சிறப்பு” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in