கும்பகோணம் அருகே குலதெய்வ கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரிசனம்

கும்பகோணம் அருகே குலதெய்வ கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரிசனம்
Updated on
2 min read

கும்பகோணம்: கும்பகோணம் பாபநாசம் வட்டம் வழுத்தூரிலுள்ள குலதெய்வமான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வாடகைத் தாய் முறை மூலம் பெற்ற இவர்களது இரட்டை குழந்தையான உயிர் ருத்ரோ நீல் என்.சிவன் மற்றும் உலக தெய்விக் என்.சிவன் ஆகியோருடன் வழுத்தூரிலுள்ள குலதெய்வமான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், இருவரும் பொங்கல் வைத்து, பரிவார தெய்வங்களான சன்னாசி, முனீஸ்வரர், நல்ல வீரப்பசாமி, மதுரை வீரன், நொண்டி கருப்பன், நாகலிங்கேஸ்வரர் ஆகிய சுவாமிகளை வழிபட்டனர். நயன்தாரா கோயிலுக்கு வந்ததை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் குவிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் வட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு நடிகை நயன்தாரா - கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வந்தனர். அப்போது கோயிலின் முன் மண்டபத்தினை பார்த்து, சோழன் கட்டிய கலைநயமிக்க சிற்பங்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

நண்பகல் 1 மணி ஆகிய நிலையில் கோயில் நடை சாத்தப்பட்டதால், வெளியிலேயே கட்டிடக் கலையைப் பார்த்து ரசித்து சிவாச்சாரியாரிடம் விவரம் கேட்டு அறிந்தனர். பின்னர் வெளியில் காத்திருந்த கல்லூரி மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in