

‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் படம், ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா உட்பட பலர் நடிக்கின்றனர். இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 63 நாட்கள் நடந்த இதன் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.