

'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துவரும் படத்துக்கு 'மகளிர் மட்டும்' என்று தலைப்பிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. அப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரம்மா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
முழுக்க பெண்கள் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பிரம்மா. இப்படத்தின் பிரதான வேடத்தில் ஜோதிகா நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்புக்கு போகும் முன்பு ஜோதிகா மற்றும் அவரோடு நடிக்கும் படக்குழுவினருக்கு நடிப்புப் பயிற்சி அளித்து வந்தார் பிரம்மா.
சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கிரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜோதிகாவோடு லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
பெயரிடப்படாமல் இருந்த இப்படத்துக்கு தற்போது 'மகளிர் மட்டும்' என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.