ஏப்ரல் 5-ல் வெளியாகிறது ‘இராவண கோட்டம்’ படத்தின் ட்ரெய்லர்

ஏப்ரல் 5-ல் வெளியாகிறது ‘இராவண கோட்டம்’ படத்தின் ட்ரெய்லர்

Published on

சாந்தனு நடித்துள்ள ‘இராவண கோட்டம்’ படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மதயானைக் கூட்டம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இதில் ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின் படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in