‘விடுதலை’ படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசளித்த வெற்றிமாறன்

‘விடுதலை’ படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசளித்த வெற்றிமாறன்
Updated on
1 min read

‘விடுதலை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் தங்க நாணயத்தை பரிசளித்துள்ளார்.

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதியும் சூரியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

படம் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் பணியாற்றிய படக்குழுவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் தங்க நாணயத்தை பரிசளித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in