‘மசாலா படங்களுக்கு ட்ரிபியூட்’: கார்த்தி - நலன் குமாரசாமி பட பூஜை

‘மசாலா படங்களுக்கு ட்ரிபியூட்’: கார்த்தி - நலன் குமாரசாமி பட பூஜை
Updated on
1 min read

ராஜு முருகன் இயக்கும், 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதில் நாயகியாக அனு இமானுவேல் நடிக்கிறார். விஜய் மில்டன், தெலுங்கு நடிகர் சுனில் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதையடுத்து ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

நாலு பாட்டு, நாலு பைஃட் என்ற ஃபார்முலாவில், ஆக்‌ஷன் மசாலாவாக இந்தப் படம் உருவாகிறது. ‘மசாலா படங்களுக்கு ட்ரிபியூட்’ என்ற அறிவிப்போடு இந்தப் படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பூஜை சென்னையில் எளிமையாக நேற்று நடந்தது. படக்குழுவினர் மட்டும் இதில் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in