ஹாரர் த்ரில்லராக உருவாகும் அங்காரகன்

ஹாரர் த்ரில்லராக உருவாகும் அங்காரகன்
Updated on
1 min read

ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் படம் ‘அங்காரகன்’. நியா, ரெய்னா காரத், ‘அங்காடித்தெரு’ மகேஷ், அப்புக்குட்டி உட்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் ஸ்ரீபதி, ‘பெண்டுலம்’, ‘ என் இனிய தனிமையே’ படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். கருந்தேள் ராஜேஷ் வசனம் எழுதியுள்ளார். பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு செய்து மோகன் டச்சு இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் ஜோமோன் பிலிப் கூறும்போது, “இது ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. பாடல்கள் இந்தப் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். கோடையில் படம் வெளியாக இருக்கிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in