

கேஎன்ஆர் மூவிஸ் சார்பில் கேஎன்ஆர்ராஜா தயாரித்து, நாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இதில், மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி நடித்துள்ளார். மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரவிவர்மாவும் பின்னணி இசையை பிரேமும் அமைத்துள்ளனர்.
சினிமாவில் நடிக்க வந்தது ஏன் என்பது பற்றி விஜயலட்சுமி கூறும்போது, “சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக கொண்டேன்” என்று கூறினார்.