பைக் ரேஸை மையப்படுத்தி உருவாகியுள்ள ரேசர்

பைக் ரேஸை மையப்படுத்தி உருவாகியுள்ள ரேசர்
Updated on
1 min read

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ள படம் ‘ரேசர்’. சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பு செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி சதீஷ் என்ற சட்ஜ் ரெக்ஸ் இயக்கியுள்ளார். பிரபாகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பரத் இசை அமைத்திருக்கிறார். கதாநாயகனாக அகில் சந்தோஷ் என்பவர் அறிமுகமாகிறார். லாவண்யா நாயகியாக நடிக்கிறார். ஆறுபாலா, சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பைக் ரேஸை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நிஜ பைக் ரேஸர்கள் நடித்துள்ளனர். அவர்களுடன் அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டியுள்ளார். “லட்சியத்துடன் வாழும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையைத் தரும் படமாக இது இருக்கும்” என்கிறார் இயக்குநர் சதீஷ் . அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ஜெனீஷ் வெளியிடுகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in