பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவுடையது நடிப்பல்ல: புகைப்பட ஆதாரத்தோடு காஜல் பதில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவுடையது நடிப்பல்ல: புகைப்பட ஆதாரத்தோடு காஜல் பதில்
Updated on
1 min read

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சுஜாவுடையது நடிப்பல்ல என்று புகைப்பட ஆதாரத்தோடு காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

செப்டம்பர் 30-ம் தேதி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. கடைசிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சிநேகன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சுஜா இருக்கும் போது, சமூகவலைத்தளத்தில் பலரும் அவர் ஓவியாவை இமிடேட் செய்கிறார் என்று கூறிவந்தார்கள். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து சுஜா வெளியேறிய நிலையிலும் அதே கருத்தைத் தெரிவித்து அவரை சாடி வந்தார்கள்.

இந்த சர்ச்சைக் குறித்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காஜல், சுஜாவைப் பற்றிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் கூட அவர் போலியாக நடிக்கிறார் என்றுதான் நினைத்தேன், ஆனால் அவர் மிகவும் கடினமான காலத்தை அனுபவித்தார், அது நடிப்பல்ல..

இவ்வாறு காஜல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in