‘தலைவி’ நஷ்டம்: வழக்குத் தொடர விநியோகஸ்தர் முடிவு

‘தலைவி’ நஷ்டம்: வழக்குத் தொடர விநியோகஸ்தர் முடிவு
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து 'தலைவி' படத்தை, விஜய் இயக்கி இருந்தார். இதில் ஜெயலலிதாவாக, கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.

அரவிந்த்சாமி, பூர்ணா, நாசர், சமுத்திரகனி உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை விப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விஷ்ணுவர்தன் இந்தூரி, ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோர் தயாரித்தனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான, இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் படத்தின் விநியோக உரிமைக்காக செலுத்திய முன்பணம் ரூ.6 கோடியை திருப்பித் தரும்படி, அந்த நிறுவனம் படத் தயாரிப்பாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது. கடந்த ஒன்றரை வருடங்களாகக் கேட்டும் பதில் ஏதும் வராததால், ஜீ ஸ்டூடியோ வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in