“ரகுவரன் இருந்திருந்தால் மிகவும் நேசித்திருப்பார்” - நடிகை ரோஹினி 

“ரகுவரன் இருந்திருந்தால் மிகவும் நேசித்திருப்பார்” - நடிகை ரோஹினி 
Updated on
1 min read

“ரகு இப்போது இருந்திருந்தால், சினிமாவின் இந்த காலகட்டத்தை மிகவும் நேசித்திருப்பார்” என நடிகை ரோஹினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ரகுவரன். கடந்த 2008-ம் ஆண்டு இதே நாளில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது நினைவுநாளையொட்டி அவரது முன்னாள் மனைவி ரோஹினி தனது ட்விட்டர் பக்கத்தில், “மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத்தான் தொடங்கியது. ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் அது மாற்றியது. ரகு இப்போது இருந்திருந்தால், சினிமாவின் இந்த காலகட்டத்தை மிகவும் நேசித்திருப்பார்; ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in