மீண்டும் படம் இயக்குகிறார் பாரதிராஜா

மீண்டும் படம் இயக்குகிறார் பாரதிராஜா
Updated on
1 min read

இயக்குநர் பாரதிராஜா இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது. இப்போது நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், நிர்மல்குமார் இயக்கும் ‘நா நா’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா.

இதற்கிடையே அவர் மீண்டும் படம் இயக்க இருக்கிறார். கடைசியாக ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்த பாரதிராஜா, பிறகு நடிப்பில் பிசியானார்.

இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்கிறார். தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘தாய்மெய்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in