திருமண வதந்திகளில் நடிகைகளே சிக்குகிறார்கள் - தமன்னா கோபம்

திருமண வதந்திகளில் நடிகைகளே சிக்குகிறார்கள் - தமன்னா கோபம்
Updated on
1 min read

நடிகை தமன்னா, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ படத்தில் நடிக்க இருக்கிறார். சினிமாவில் 18 வருடங்களை நிறைவு செய்துள்ள தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. இதுபற்றி, “ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்போது அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய் வர்மாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அவ்வளவுதான். இதுபோன்ற காதல் வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவை அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கு மேல் இதுபற்றி சொல்வதற்கு ஏதுமில்லை.

நடிகர்களை விட நடிகைகளே அதிகமாக திருமண வதந்திகளில் சிக்குகிறார்கள். அது ஏன் நடக்கிறது என்பது தெரியவில்லை. உண்மையிலேயே நடிகைகள் திருமணம் செய்துகொள்வதற்கு முன், பலமுறை திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வருகின்றன. டாக்டர் முதல் தொழிலதிபர் வரை பலரை எனக்கு திருமணம் செய்து வைத்திருக் கிறார்கள். இதனால், நான் பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன். ஆனால், உண்மையில் நான் திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அவர்கள் உற்சாகமாவார்களா? அல்லது இதுவும் வதந்திதான் என நினைப்பார்களா எனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in