

நடிகர் பிரஜின் நாயகனாக நடித்துள்ள படம் 'டி 3’. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதை, பாலாஜி இயக்கியுள்ளார். வித்யா பிரதீப் நாயகியாக நடிக்கிறார். பீமாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மனோஜ்எஸ் தயாரித்துள்ளார். மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது.
படம்பற்றி இயக்குநர் பாலாஜி கூறும்போது, “எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வான் என்பது பிரபஞ்ச உண்மை.
இந்தப் படத்தின் கதையில் குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளி ஒரு வார்த்தையை விட்டுச் செல்கிறான். அந்த வார்த்தைக்கான காரணத்தின் நுனி தேடி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்கை முடிப்பதுதான் கதை” என்றார்.