விஜய்யின் ‘லியோ’ படத்தில் இணைந்த சஞ்சய் தத் - வெளியானது வீடியோ

விஜய்யின் ‘லியோ’ படத்தில் இணைந்த சஞ்சய் தத் - வெளியானது வீடியோ
Updated on
1 min read

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகி இருக்கும் சஞ்சய் தத், இதில் மெயின் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படக்குழுவுடன் அவர் நேற்று இணைந்தார். இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in