சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ‘கூழாங்கல்’ இயக்குநர் வினோத்ராஜ் இயகுக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ படத்தை தயாரித்திருந்தார். தொடர்ந்து அவர் தற்போது தயாரிக்கும் புதிய படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். அவருடன் அனன்யா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

‘கூழாங்கல்’ பட புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். சூரியை பொறுத்தவரை அவரது நடிப்பில் இம்மாத இறுதியில் ‘விடுதலை பாகம் 1’ திரைக்கு வர உள்ளது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், தற்போது முதன்மைக் கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in