போர்க் கப்பலில் படமாக்கப்பட்ட ஆபரேஷன் அரபைமா

போர்க் கப்பலில் படமாக்கப்பட்ட ஆபரேஷன் அரபைமா
Updated on
1 min read

கப்பல்படை முன்னாள் வீரர் பிராஷ் இயக்கியுள்ள படம், ‘ஆபரேஷன் அரபைமா’. பி. நடராஜன் வழங்கும் இந்தப் படத்தில் ரகுமான், அபிநயா, நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பிராஷ் பேசும்போது, “நான் கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என மூன்று படைத்தளங்களிலும் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி. பின் ஒரு விபத்தில் சிக்கினேன். அதில் இருந்து மீண்டு வர, அப்துல் கலாமின் ‘விங்ஸ் ஆப் பயர்’ புத்தகம்தான் உதவியது. பிறகு அவரைச் சந்தித்தேன். அவர் வாழ்க்கையை படமாக்க எனக்கு உரிமை கொடுத்தார். 2014ஆம் ஆண்டு அதன் அறிவிப்பை வெளியிட்டேன். பின் அந்தப் படம் முழுமையாக எடுக்கப்படவில்லை.

போதை பொருளின் பாதிப்பைச் சொல்லும் படம்தான் ‘ஆபரேஷன் அரபைமா’. போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுவாகத்தான் இருக்கும். இதை கிராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. வித்தியாசமான 17 லொகேஷன்களை இப்படத்தில் காட்டியுள்ளேன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in