தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து விலகினார் இயக்குநர் கரு.பழனியப்பன்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து விலகினார் இயக்குநர் கரு.பழனியப்பன்
Updated on
1 min read

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் இயக்குநர் கரு பழனியப்பன்.

இயக்குநர் கரு பழனியப்பன், நடிகர் அருள்நிதியை வைத்து ஒருபடம் இயக்கி வருகிறார். இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது பிறந்தநாளான இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள்!!!

இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட "தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...!

சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in