அஜித்தின் 2-வது உலக ‘பைக் டூர்’ - மேனேஜர் புது தகவல்

அஜித்தின் 2-வது உலக ‘பைக் டூர்’ - மேனேஜர் புது தகவல்
Updated on
1 min read

அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு அஜித், உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்துக்கு 'பரஸ்பர மரியாதை பயணம்' (Ride for mutual respect) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 'துணிவு' படத்தின்போதும் இதுபோல் ஓர் உலக சுற்றுப் பயணத்தை அஜித் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in