Published : 06 Mar 2023 06:05 AM
Last Updated : 06 Mar 2023 06:05 AM
திருவண்ணாமலை: நடிகர் விஜய் பற்றிய கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும் என அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் 2-வது நாளாக நேற்றும் சுவாமி தரிசனம் செய்தார். பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள திருமணி சேறையுடையார் சிவன் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார்.
பின்னர், சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், கோ பூஜை செய்து வழிபட்டார்.
முன்னதாக, ஆரணியில் பிரசித்திப்பெற்ற புத்திர காமேட் டீஸ்வரர் கோயிலில் சனி பிரதோ ஷத்தையையொட்டி நேற்று முன் தினம் மாலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி - நடிகர் விஜய்யின் சினிமாவில் உள்ள நிலை மற்றும் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா?
எஸ்.ஏ. சந்திரசேகர் - அவரை பற்றிய கேள்வியை அவரிடமே கேளுங்கள்.
கேள்வி- ஆரணி சிவன் கோயிலுக்கு வர காரணம் என்ன?
எஸ்.ஏ. சந்திரசேகர் - ஆரணிக்கு திடீரென வந்தேன். அப்போது, சிவனுக்கு உகந்த நாள் என்றார்கள். அதனால், சிவனை தரிசித்து அவரது ஆசியை பெற வந்துள்ளேன்.
கேள்வி - தமிழக அரசியலில் சினிமா நடிகர்களை மக்கள் புறக் கணித்து வருகின்றனர். நடிகர் விஜய்காந்த், சீமான் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இது குறித்து உங்களது கருத்து என்ன?
எஸ்.ஏ.சந்திரசேகர் - போகலாமா?
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அவரிடமே கேளுங்கள் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பதில், எஸ்.ஏ.சி. அப்பா என அழைத்து வந்த விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT