மார்ச் 17-ல் வெளியாகும் காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’

மார்ச் 17-ல் வெளியாகும் காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’
Updated on
1 min read

காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘கோஸ்டி’ திரைப்படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'குலேபகாவலி, 'ஜாக்பாட்' படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'கோஸ்டி' (ghosty). படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. 'ஓடிடியில ரிலீசான ஓட்டி ஓட்டி பாக்கலாம்னு பாக்குறீயா, தியேட்டர்ல தான் ரிலீசாகும்' என யோகிபாபுவின் வசனம் கவனம் பெற்றது. மொத்த டீசரும் முக்கியமான நடிகர்களின் தோற்றத்தால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in