ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’
Updated on
1 min read

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் உருவாகும் படம், ‘லப்பர் பந்து’. ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் நாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று போடப்பட்டது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in