Published : 01 Mar 2023 08:27 PM
Last Updated : 01 Mar 2023 08:27 PM
திரையரங்கில் இந்த வாரம் 5 படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பது குறித்து பார்ப்போம்.
அயோத்தி: சசிகுமார் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அயோத்தி’. என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ள இப்படத்தில் யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பகீரா: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பகீரா’. அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார். படம் வரும் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இன் கார்: ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் ரித்திகா சிங் நடித்துள்ள படம் ‘இன்கார்’. பான் இந்தியா முறையில் வெளியிடப்படும் இப்படத்திற்கு மத்தியாஸ் டுப்ளெஸி பின்னணி இசையமைத்துள்ளார். தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா வெளியிடும் இப்படத்தை மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் காணலாம்.
அரியவன்: அறிமுக நடிகர்கள் ஈஷான், ப்ராணலி நடித்துள்ள படம் ‘அரியவன்’. மார்ச் 3-ம் தேதி வெளியாகும் இப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கினார் என கூறப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மித்ரன் ஜவஹர் படத்தை தான் இயக்கவில்லை எனவும், உதவியாளர் இயக்கியதாகவும் தெரிவிந்தது குறிப்பிடத்தக்கது.
பல்லு படாம பாத்துக்கோ: விஜய் வரதராஜ் இயக்கத்தில் அடல்ட் காமெடி பாணியில் உருவாகியுள்ள படம் ‘பல்லு படாம பாத்துக்கோ’ (பிபிபி). அட்டகத்தி தினேஷ், ஷாரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு பாலமுரளி இசையமைத்துள்ளார். படம் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT