“பெண்கள் தெய்வத்திற்கு சமம்” - நடிகர் சதீஷ் கருத்து 

குடிமகான் இசை வெளியிட்டு விழாவில் சதீஷ்
குடிமகான் இசை வெளியிட்டு விழாவில் சதீஷ்
Updated on
1 min read

“ஆணும் பெண்ணும் சமமல்ல; பெண்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்” என நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. பிரகாஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சதீஷ், “பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம். நான் அப்படித்தான் இவற்றில் இருந்து ஒதுங்கினேன்.

இதுபற்றி சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசியிருக்கிறேன். பெண்கள் கல்லூரியில் கலந்து கொண்டபோது கூட இதே விஷயத்தை வலியுறுத்தி பேசும்படி அந்த கல்லூரியின் முதல்வர் கேட்டுக் கொண்டார். ஏன் எனக் கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக இந்த விஷயத்தில் பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் எனக் கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களைவிட பல மடங்கு மேலானவர்கள் தான். சொல்லப்போனால் பெண்கள் தெய்வத்திற்கு சமம். பெண்களுக்கு பிறந்ததிலிருந்தே பிரச்சினை தான். பள்ளிக்கூடத்திற்கு செல்வதில் தொடங்கி திருமணம், மகப்பேறு என அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in